ரஜினிக்கு அடுத்து தனுஷுடன் கூட்டணி போடும் கார்த்திக் சுப்பராஜ்

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 04:59 am
karthik-subbaraj-to-teamup-with-dhanush

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படம் மெகா ஹிட்டாகி, 230 கோடிக்கும் மேல் வசூலை குவித்து வரும் நிலையில், அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்த பேட்ட படம் மெகா ஹிட்டாகி உள்ளது. உலகம் முழுவதும் பேட்ட 250 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு, கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அடுத்ததாக தனுஷுடன் இணையவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.

ஏற்கனவே தனுஷுடன் தான் படம் இயக்க இருந்தபோது, பேட்ட படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறிய கார்த்திக், அப்போது ரஜினிகாந்துக்காக அந்த படத்தை கிடப்பில் போட்டதாகவும், அதற்கு தனுஷும் பெருந்தன்மையுடன் ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தை, முன் திட்டமிட்டபடியே ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close