பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த படத்திற்கு தயாராகி வரும் ரஜினிகாந்த், 2.0 வசூலில் எதிர்பார்த்த அளவு சாதிக்காததால், தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா என பெரும் நட்சத்திரக் பட்டாளமே நடித்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி மெகாஹிட்டான திரைப்படம் பேட்ட. இதைத் தொடர்ந்து, அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்பந்தமாகியுள்ளார். 2.0 படத்தை தொடர்ந்து, இந்த படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்திற்காக ரஜினி 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. படத்தில் நாயகியாக சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் முருகதாஸுடன் ஒப்பந்தமாகலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் பேசப்படுகிறது. 2.0 திரைப்படம் 550 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் வெளியானாலும், தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லையாம். அதனால் இந்த படத்தில், தனக்கான சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளாராம் ரஜினிகாந்த்.
newstm.in