பதவியை ராஜினாமா செய்த பார்த்திபனிடம் உருகிய விஷால்

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 05:43 pm
vishal-sense-emotional-message-to-parthiban

இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழாவை கொண்டாட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த விழாவை ஒருங்கிணைத்து, பின் தனது பதவியை ராஜினாமா செய்த சங்கத் துணைத் தலைவர் பார்த்திபனுக்கு, தலைவர் விஷால் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழாவை, தயாரிப்பாளர் சங்கம் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தது. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஏ.ஆர் ரஹ்மான் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு முக்கிய காரணமாக இருந்த தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவர் பார்த்திபன், தனது பதவியை விழாவுக்கு முன் ராஜினாமா செய்தார்.

விழாவிற்கு ஏ.ஆர் ரகுமானை வழியனுப்பி வைத்த பார்த்திபன், விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து பார்த்திபனுக்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அனுப்பிய ஒரு உருக்கமான மெசேஜை பார்த்திபன் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நீங்கள் சரித்திரம் படைத்துள்ளீர்கள். நிகழ்ச்சியில் உங்களை மிகவும் மிஸ் செய்தேன். நீங்கள் எனக்காக இதைச் செய்தீர்கள் என்று தெரியும். என்றென்றும் அன்புடன்" என்று விஷால் எழுதி இருந்தார்.

அடுத்து விஷால் நடிக்கும் 'அயோக்கியா' படத்தில் பார்த்திபன் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close