எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் தாயார் காலமானார்

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 08:20 pm
sp-balasubramaniam-s-is-mother-passes-away

பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் தாயார் சகுந்தலாம்மா, வயோதிகம் காரணமான உடல்நலக்குறைவால், நெல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.

இந்தியாவின் பிரபல பாடகர்களும் ஒருவரான எஸ்.பி பாலசுப்ரமணியம், கடந்த அரை நூற்றாண்டாக 16க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்களை பாடி வருகிறார். அவரது தாயார் சகுந்தலாம்மா, இன்று காலை காலமானார். 89 வயதான அவர், கடந்த சில தினங்களாக வயோதிகம் காரணமான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக, எஸ்.பி.பி-யின் தங்கை சைலஜா தெரிவித்துள்ளார்.

"எங்கள் குடும்பத்திற்கு இது மிகப்பெரிய இழப்பு. அம்மாவின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. லண்டன் சென்றிருந்த எனது சகோதரர் இப்போது அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்று நெல்லூரில் வந்து தரையிறங்குவார்" என சைலஜா தெரிவித்துள்ளார்.

ஒரு கச்சேரிக்காக லண்டன் சென்றிருந்த எஸ்.பி பாலசுப்ரமணியம், அதை ரத்து செய்துவிட்டு உடனடியாக திரும்பி வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close