96 படத்தின் புதிய க்ளைமாக்ஸ்: 100வது நாள் கொண்டாட்டத்தில் நடந்த சுவாரஸ்யம்!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 05:54 pm
96-100th-day-celebration

இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் வெளியான 96 திரைப்படம் 100வது நாளை கடந்து வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

இதன் கொண்டாட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன், "காதலிக்க காதலியோ காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதுமானது. பொதுவாக ஆண், பெண் ஆசைப்படுவது ஓர் இடம், ஆனால் வாழ்க்கைப்படுவது வேறு ஒரு இடமாக இருக்கும். அது போல இந்த மியூசிக் சிம்பிள்கள் கொண்ட சட்டையை இளையராஜா நிகழ்ச்சியில் அணிந்து கொள்வதற்காக ஒரு மாதம் முன்பே வாங்கினேன். ஆனால் சில காரணங்களால் அங்கு நான் செல்லவில்லை. அந்த சட்டையோடு தான் இங்கே வந்திருக்கிறேன். 

யமுனை ஆற்றிலே பாடலின் உண்மையான வெர்ஷனை விட, இந்த படத்தில் அந்த பாடல் எப்போது வரும் என்று தான் காத்திருந்தேன். அந்த  காட்சியை பார்த்த பின் இயக்குநரின் கால்களை தொட்டு கும்பிட வேண்டும் என்று நினைத்தேன். இந்த படத்தில் இருக்கின்ற ஃப்ரேம் அனைத்திலும் பிரேம் தான் இருக்கிறார். 

பல நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் மக்களிடம் பேசம் போது ஒரு ஈர்ப்பு, அவர்களை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துட்டு இருக்கார் விஜய் சேதுபதி. தியாகராய பாகவதருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருந்திருக்கிறார்கள். அவருக்கு பிறகு பெண்கள் மத்தியில் அதிக ஈர்ப்பு இருக்கிறது விஜய் சேதுபதிக்கு தான். அதை நினைத்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. சில படங்களுக்கு மட்டும்தான் த்ரிஷா இல்லை என்றால் நயன்தாரா. ஆனா, இந்தப் படத்துக்கு த்ரிஷா இல்லைனா த்ரிஷா மட்டும்தான்.

அவர் நடித்தது மாதிரி தெரியவில்லை. நான் முதன்முறையாக த்ரிஷாவைப் பார்க்கும்போது நடிக்கிறீங்களா?னு கேட்டேன். மாட்டேனு சொல்லிட்டாங்க. இந்த மாதிரி எத்தனையோ ஹீரோயின்கள் வாழ்க்கையைக் கெடுக்கலாம்னு நினைச்சிருக்கேன். அதில் தப்பித்தவர்கள் தான் த்ரிஷாவும் நயன்தாராவும். படம் முழுக்க நம்மை ஏமாற்றி காக்க வைத்து கடைசி வரைக்கும் ஒரு முறையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களா என்று ஆர்வமாக இருந்தோம். அது இங்கே நடக்க இருக்கு" என்று த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதியை மேடைக்கு அழைத்து கட்டிப்பிடிக்க சொன்னார்.  

காதலே காதலே பாடல் பின்னணி இசையாக வர இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டனர். ``இதுதான் படத்தின் க்ளைமேக்ஸ்" என்றார் விஜய் சேதுபதி. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close