திருமணத்திற்கு தயாராகும் செளந்தர்யா ரஜினிகாந்த்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 11:35 am
soundarya-rajinikanth-shared-her-bridal-look

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடி ஆகியோரின் திருமணம் 11ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் மணப்பெண் போல தயாராகி நிற்கும் தன்னுடைய புகைப்படத்தை செளந்தர்யா வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வேத் என்று பெயரிட்டனர். இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, ஒருமித்த கருத்து அடிப்படையில், சென்னை மாவட்ட முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தின் மூலம் விவகாரத்து பெற்றனர். 

இந்நிலையில் சௌதர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விசாகனும் விவாகரத்து பெற்றவர். 

விசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்துள்ளார். திமுக பிரமுகர் சூலூர் வணங்காமுடியின் மகன் ஆவார்.  இந்நிலையில் சௌந்தர்யா மற்றும் விசாகன் திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

 

 

இந்நிலையில் திருமணத்திற்கு தயாராகி வருவதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மணப்பெண் போல தயாராகி நிற்கும், தன்னுடைய புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close