மாதவிலக்கு தூய்மையானது: சபரிமலை விவகாரத்தில் விஜய் சேதுபதியின் கருத்து

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 05:43 pm
vijay-sethupathi-s-comment-on-sabarimala-issue

மாதவிலக்கு தூய்மையானது என்றும் சபரிமலை விவகாரத்தில் தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பக்கம் தான் என்றும் சபரிமலை விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார். 

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனையும் மீறி 2 பெண்கள் கோயிலுக்கு சென்று வந்துவிட்டனர். 

இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்த நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "ஆணாக இருந்து வாழ்க்கை வாழ்வது மிகவும் சுலபம். ஆனால், பெண்களுக்கு அப்படியில்லை. ஒவ்வொரு மாதமும், பெண்கள் மாதவிலக்கினால், வலி அனுபவிக்க வேண்டும். 

மாதவிலக்கு தூய்மையானதல்ல என்று யார் கூறியது? . அது மிகவும் புனிதமானது. சபரிமலை விவகாரத்தில் நான் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பக்கம் தான் நிற்பேன்" என்று கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close