தெலுங்கு நடிகை தற்கொலை - காதல் தோல்வி காரணமா?

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 06:55 pm
telugu-actress-naga-jhansi-committed-suicide-amid-love-failure

தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தவரும், சின்னத்திரை நடிகையுமான நாக ஜான்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு காதல் தோல்வி காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

‘மா டிவி’ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய நிகழ்ச்சியில் பவித்ரா பந்தன் என்ற பெயரில் அறிமுகமானவர் நாக ஜான்சி. தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஹைதராபாதில் அவர் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று ஜான்சியை பார்ப்பதற்காக அவரது சகோதரர் அங்கு சென்றபோது, வீட்டுக் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர், காவல்துறைக்கு தகவல் அளித்தார். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கிட்டபடி நாக ஜான்சி உயிரிழந்து கிடந்தார்.

இதையடுத்து, நாக ஜான்சியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், அதை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 6 மாதங்களாக ஆண் நண்பர் ஒருவருடன் நல்ல நட்புடன் நாக ஜான்சி பழகி வந்ததாகவும், அவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த இளைஞர் நாக ஜான்சியின், தூரத்து உறவினர்தான் என்று விஷயம் அறிந்த நபர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ஜான்சியின் செல்போனை கைப்பற்றி, அதில் இருந்து சென்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close