'தல' அஜித்துடன் ஸ்ரீதேவியின் மகள்

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 03:39 pm
jahnvi-kapoor-to-make-tamil-debut-with-thala-ajith

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, 'தல' அஜித், போனி கபூர் தயாரிப்பில் நடித்து வரும் படத்தின் மூலம், ஸ்ரீதேவி - போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தல அஜித் தற்போது 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இயக்குனர் வினோத் இயக்குகிறார். பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

அமிதாப்பச்சன், டாப்ஸி ஆகியோர் நடித்து பாலிவுட்டில் மெகாஹிட்டான படம் 'பிங்க்'. இதன் ரீமேக்கில், அஜித்துடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் தோன்றுவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஸ்ரீதேவி - போனி கபூரின் மகள் ஜான்வி கபூர், பாலிவுட்டில் அறிமுகமானதை தொடர்ந்து, தமிழில் நடிக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், பிங்க் ரீமேக்கில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close