லேடி சூப்பர்ஸ்டாரின் அடுத்த படம்!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 04:56 pm
nayanthara-s-next-ready-for-release

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அன்பாக அழைக்கப்படும் நயன்தாரா, மலையாளத்தில் 'ப்ரேமம்' நாயகன் நிவின் பாலியுடன் நடித்துள்ள 'லவ் ஆக்ஷன் டிராமா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்துடன் நயன்தாரா நடித்த விஸ்வாசம் திரைப்படம், பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'மாயா' முதல் 'விஸ்வாசம்' வரை, நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களை தேடி நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இதற்கு முன், மலையாளத்தில் மம்மூட்டியுடன் 'புதிய நியமனம்' படத்தில் நயன் தோன்றியிருந்தார். தற்போது நிவின் பாலியுடன் 'லவ் ஆக்ஷன் டிராமா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன் தயான் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். 

இந்த படம் ஒரு ரொமான்டிக் காமெடி கதையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி படம் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவின் பாலிக்கும் தமிழில் இளம் ரசிகர்கள் அதிகம் உள்ளதால், இந்த படம் தமிழில் கணிசமான அளவு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close