விஷாலின் அயோக்யா டீசர் வெளியானது!!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 10:46 am

vishal-s-ayogya-teaser

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி  ஹிட்டடித்த ‘டெம்பர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ திரைப்படத்தின் டீசரை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ள இப்படத்தின் அதிரடி ஆக்‌ஷன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பார்த்திபன், வம்சி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close