செல்பி எடுத்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவகுமார்

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 11:58 am
again-fan-tried-to-take-selfie-with-sivakumar

சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டிவிட்டுள்ளார். 

கடந்தாண்டு அக்டோபர் மாதம் மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையம் தொடக்க விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். இதில் நடிகர் சிவகுமாருடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனை சிவக்குமார் கீழே தட்டிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் அவருக்கு பலரும் இணையத்தில் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த இளைஞருக்கு சிவகுமார் புதிய செல்போன் வாங்கி கொடுத்தார். 

இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. அவர் திருமண மண்டபத்தின் உள்ளே நுழையும் போது ஒருவர் செல்பி எடுக்க முயற்சிக்கிறார். உடனே சிவகுமார் அந்த நபரின் செல்போனை தள்ளி விடுகிறார். 

அப்போது அருகில் இருப்பவர், அவர் இப்படி தான் செய்வார் என்று தெரிந்தும் ஏன் செல்பி எடுக்கிறீர்கள் என்பது போல கூறிவிட்டு செல்கிறார். தற்போது இந்த வீடியோ அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close