நடிகைகளின் உடைக்குறித்து கருத்து: புதிய சர்ச்சையில் சிக்கிக்கொண்ட எஸ்.பி.பி

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 02:24 pm
spb-faces-new-trouble-over-his-view-on-actress

பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியாக வருவதால் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதே நடிகைகளின் நோக்கமாக இருக்கிறதா என்று பாடல் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. 

நடிகைகளின் உடைக்குறித்து பிரபல பாடகர் எஸ்.பி.பி பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சமீபத்தில் ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "நடிகைகள் இப்போதெல்லாம் பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சியாக உடை அணிந்து வருகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கு வரும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அதை பார்த்து தங்கள் படங்களில் வாய்ப்பளிப்பார்கள் என்ற எண்ணத்துடன் அப்படி உடை அணிந்து வருகிறார்களா என்று தோன்றுகிறது. 

சமூக பொறுப்பும், கலாச்சாரமும் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது" என்றார். அவரின் இக்கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தனது கருத்துக்கு எதிர்ப்பு வரும் என்றும் ஆனால் தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close