எல்லா காதலும் சில்றதனமானது தான்: ஹிட் அடித்த ஹிரிஷ் பட டீசர்

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 03:14 pm
ispade-rajavum-idhaya-raniyum-trailer

பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு  நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட் கார்ட்டாக நுழைந்து பலரையும் கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரைசா உடன் இணைந்து இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். இந்த படத்தை தயாரித்த யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவும் செய்தார். 

இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து ஹரிஷ் கல்யாண் புரியாத புதிர் புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்  திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மாகாபா மற்றும் பாலா சரவணன் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 
newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close