இனி தியேட்டரில் வீடியோ எடுத்தால் சிறை தான்!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 04:28 pm
cabinet-approves-amendments-to-cinematograph-act-to-tackle-film-piracy

இந்திய சினிமா துறையினருக்கு பெரும் பிரச்னையாக இருந்து வரும் சட்டவிரோதமாக திரைப்படங்களை இணையத்தில் வெளியாவதை தடுக்க திரைப்படங்களை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்தால் சிறை தண்டனை என்ற சட்டத்திற்கு  மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

நாளுக்கு நாள் திரைப்பட பைரசி அதிகமாகி வருகிறது. படங்கள் வெளியான அன்றே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாவது வழக்கமாகி விட்டது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் திரைப்பட பைரசி, காப்புரிமை மீறல் தொடர்பான சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி,  திரைப்படங்களை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்வது, பிரதிகள் எடுப்பது உள்ளிட்டவை சட்டவிரோதமாகும். அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close