ஓவியா படத்திற்கு ஏ சர்டிஃபிகேட்!

  Newstm News Desk   | Last Modified : 08 Feb, 2019 01:15 pm

oviya-movie-gets-a-certificate

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்துள்ள 90 எம்எல் படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது. 

குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியவர் அனிதா உதீப் இவர் தற்போது இயக்கிவரும் படம் 90 எம் எல். ஓவியா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்துக்கு நடிகர் சிம்பு இசையமைக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தை நிவிஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பாக உதீப் தயாரிக்கிறார். இந்த படத்தில் இருந்து மிர்ச்சி விஜய் எழுதிய ஃபிரண்டி டா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர்  ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். தற்போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close