வர்மா படத்தை இயக்கும் கௌதம்... நாயகியாக ஜான்வி?

  Newstm News Desk   | Last Modified : 09 Feb, 2019 09:59 am

gvm-to-direct-varma

அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கை பாலா இயக்கி முடித்து திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் கைவிடப்பட்ட நிலையில் இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குவதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் செய்வது என தயாரிப்பு நிறுவனமான E4 Entertainment நிறுவனம் முடிவு செய்து இயக்குனர் பாலாவிடம் ஒப்படைத்தது. விக்ரமின் மகன் துருவை கதாநாயகனாக வைத்து பாலாவும் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். கடந்த 4 வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் மாதம் வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியானது. 

இந்நிலையில், திரைப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், வேறு இயக்குநர் மற்றும் வேறு நடிகர்களுடன் படப்பிடிப்பை மீண்டும் புதிதாக நடத்தவுள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில் இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அல்லது பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனோ அல்லது சோலோ படத்தை இயக்கிய பிஜாய் நம்பியாரோ இயக்குவர் என தெரிகிறது. 

மேலும் இந்த படத்தில் நாயகியாக மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close