நல்லது செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்: எஸ்ஏசி

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 01:36 pm
sac-about-actors-political-entry

சமூகத்திற்கு நல்லது செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம் என்று இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலியில் உள்ள பணகுடியை அடுத்த வடக்கன்குளத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் இயக்குநர் சந்திரசேகரும், அவரது மனைவி ஷோபாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், மோடி மீண்டும் பிரதமராக கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக உள்ளதாகவும், தற்போதைய ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் மிகவும் அச்சமடைந்துள்ளதாகவும் கூறினார். மேலும் சமூகத்திற்கு நல்லது செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close