தெய்வீக குரலும்...புனிதமான இசையும்: ஷான் ரோல்டனை பாராட்டிய தனுஷ்

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 04:48 pm
dhaush-hails-sean-roldan

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வெள்ளாட்டு கண்ணழகி பாடலின் வரிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இசையமைப்பாளர் ஷான் ரோல்டனை நடிகர் தனுஷ் பாராட்டி உள்ளார். 

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அந்தப் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த தனுஷ், ட்விட்டரில் ஷான் ரோல்டனைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

‘வெள்ளாட்டுக் கண்ணழகி, கோடி அருவி கொட்டுதடி. ஷான் ரோல்டன்... உங்கள் தெய்வீகக் குரலும், புனிதமான இசையும் மனதை வருடுகிறது. வாழ்த்துகள்!’ எனத் தனுஷ் தெரிவித்துள்ளார் . 

சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்துக்கு, ராஜு முருகன் கதை எழுதியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், சுவேதா திரிபாதி, வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே. விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

 

வேலையில்லா பட்டதாரி 2, பவர் பாண்டி ஆகிய படங்களில் இவர் தனுஷுக்காக இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close