'வர்மா'விலிருந்து நானே விலகினேன்: இயக்குனர் பாலா

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 09:21 pm
i-made-the-decision-to-leave-varma-director-bala

துருவ் விக்ரம் நடிப்பில், பாலா இயக்கி வந்த வர்மா திரைப்படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், படைப்பு சுதந்திரத்தை காக்க தானே படத்தில் இருந்து விலகியதாக இயக்குனர் பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில், தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்குனர் பாலா இயக்கி வந்தார். திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் பாலாவுக்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இரு தினங்களுக்கு முன் திடீரென, பாலா படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும்; படத்தை முழுவதும் வேறு இயக்குனரை வைத்து முதலிலிருந்து எடுக்க உள்ளதாகவும், தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. துருவ் தவிர அனைவரும் மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை மறுத்துள்ளார். படைப்புச் சுதந்திரத்தை காப்பதற்காக தானே படத்தை விட்டு விலகியதாக அவர் தெரிவித்துள்ளார். துருவ் விக்ரமின் எதிர்காலத்தை மனதில் வைத்து, இந்த விஷயத்தை இப்படியே முடித்துக்கொள்ளவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். தயாரிப்பாளருடன் இதற்காக கடந்த மாதம் 22ம் தேதி பாலாவின் பி ஸ்டுடியோஸ் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close