ரேவதியுடன் இணைந்து ஜோதிகா நடிக்கும் காமெடி படம்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 10:30 am

jyothika-revathy-to-act-in-kalyan-movie

புதுமுக இயக்குநர் எஸ் ராஜ் இயக்கத்தில் திரைப்படம் ஒன்றில் நடித்து முடித்துள்ள நடிகை ஜோதிகா, அடுத்ததாக குலேபகாவலி திரைப்படத்தின் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ரேவதியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

தனது சினிமாவில் வாழ்க்கையில் இரண்டாவது இன்னங்சில் வெற்றிகரமாக சென்றுக் கொண்டு இருக்கும் நடிகை ஜோதிகா, அடுத்தடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்துவருகிறார். 

நாச்சியார் திரைப்படத்திற்கு பிறகு அவர்   புதுமுக இயக்குநரான எஸ் ராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது அடுத்த படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். 

பிரபுதேவா நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தின் இயக்குநர் அடுத்ததாக இயக்கும் படத்தில் ஜோதிகா நடிக்க இருக்கிறார். ஜோதிகாவுடன் சேர்ந்து நடிகை ரேவதியுடன் நடிக்கிறார். இவர் குலேபகாவலி படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஸ்லாப்ஸ்டிக் வகை காமெடி திரைப்படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குலேபகாவலி திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்த ஆர் எஸ் ஆனந்த குமார் மற்றும் எடிட் செய்த விஜய் வேலுக்குட்டி தான் இந்த படத்திலும் பணிப்புரிய இருக்கின்றனர். மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  இருக்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close