90 எம்எல் டிரைலர் குறித்து ஓவியா விளக்கம்!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 11:30 am
oviya-about-90-ml-trailer

நேற்று முன்தினம் வெளியான 90 எம்எல் திரைப்படத்தின் டிரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், "பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள்" என ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஓவியா. அவர் நடித்திருக்கும் களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்.எல் ஆகிய படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குளிர் 100 டிகிரி படத்தை இயக்கிய அனிதா உதீப் 90 எம்எல் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சிம்பு இசையதத்துள்ளார். இதற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கும் நிலையில் இதன் டிரைலர் நேற்று முன் தினம் வெளியானது. இந்த டிரைலர் பெரும் சர்ச்சையை ஏறபடுத்தியது. 

 

 

மேலும் படத்தின் டிரைலரைப் பார்த்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “இந்த மாதிரி படங்கள் தமிழ் சினிமாவின் சாபக்கேடு” என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லருக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து பதிலளித்திருக்கும் ஓவியா, “பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். டிரைலரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

லிப்லாக், சரக்கு, கஞ்சா; சமூக வலைதளங்களை தெறிக்கவிட்ட ஓவியாவின் 90 ML!

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close