ஆண் குழந்தைக்கு தந்தையானார் பிக்பாஸ் சென்றாயன்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 12:48 pm
sendrayan-blessed-with-boy-baby

பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் வில்லனாகவும் நடித்து பின் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு பலரது கவனத்தை பெற்ற நடிகர் சென்றாயன் தற்போது ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெகுளித்தனமான தன்மையால் மக்களிடம் மிகவும் பரிச்சியமானவராக மாறினார் சென்றாயன். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் கயல்விழி என்பவரை சென்றாயன் காதலித்து திருமணம் செய்துகொண்டாா். ஆனால் அவா்களுக்கு சிறிது காலம் குழந்தை இல்லாமல் இருந்தது. 

சென்றாயன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அவரது மனைவி கா்ப்பம் அடைந்திருந்தாா். பின்னா் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சென்றாயனின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினா் கா்ப்பம் குறித்து எடுத்துக் கூறியதும் சென்றாயன் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். 

இந்நிலையில் சென்றாயன் மற்றும் கயல்விழி தம்பதிக்கு நேற்று மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களுக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close