சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 01:45 pm
soundarya-rajinikanth-weds-vishagan

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கடந்த 8ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விருந்தினர்களுக்கு ரஜினி விதை பந்து கொண்ட தாம்பூலப்பை கொடுத்து அசத்தினார்.

தொடர்ந்து இரு நாட்கள் பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், சென்னையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் -விசாகன் திருமணம் இன்று  நடைபெற்றது.

சென்னை .ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸில் நடைபெறும் இந்த திருமண நிகழ்ச்சிக்கு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலர் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் கோபால், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத்,  இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ், ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close