நடிகர் விஜய் சேதுபதி பகவத் கீதைப் பற்றி தவறாக கருத்து கூறினார் என்று தகவல் பரவிய நிலையில் அது பொய் என்றும் இதுபோன்று பேசி தன் மக்களின் நம்பிக்கையை குலைக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி என்றால் அதனை விஜய் சேதுபதியின் பெயரை யோசிக்காமல் கூறலாம். அந்த அளவுக்கு ஒரு நடிராக அவரின் வளர்ச்சி இருந்திருக்கிறது. வளர்ச்சியோடு சர்ச்சைகளும் ஒரு நடிகரை தொடர்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் வாரம் ஒரு சர்ச்சையில் விஜய் சேதுபதி சிக்கி கொள்கிறார்.
சமீபத்தில் அவர் பகவத் கீதைப்பற்றி தவறாக பேசியதாக ஒரு தனியார் தொலைக்காட்சியின் பெயரில் ஒரு புகைப்படம் இணையத்தில் பரவியது. ஆனால் அது பொய்யானது என்று விஜய் சேதுபதி உறுதி செய்துள்ளார்.
என் அன்பிற்குரிய மக்களுக்கு
— VijaySethupathi (@VijaySethuOffl) February 11, 2019
பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை
பேசவும் மாட்டேன்
சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது
எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன் pic.twitter.com/40nkrbVfR5
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை, பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.
newstm.in