மகள் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 04:48 pm
rajinikanth-thanks-to-everyone-who-are-all-come-to-his-daughter-marriage

தனது மகள் சௌந்தர்யா- தொழிலதிபர் விசாகன் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவுக்கும், கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கடந்த 8ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  விருந்தினர்களுக்கு ரஜினி விதை பந்து கொண்ட தாம்பூலப்பை கொடுத்து அசத்தினார்.

தொடர்ந்து இரு நாட்கள் பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், சென்னையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் -விசாகன் திருமணம் நேற்று நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சிக்கு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலர் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். 

இந்நிலையில் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:-

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close