பிரபல இயக்குநர் காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 09:39 am
telugu-director-vijaya-bapineedu-who-made-chiranjeevi-a-superstar-dies-at-82

பிரபல தெலுங்கு பட இயக்குநர் விஜய பாப்பிநீடு உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

தெலுங்கு பட உலகில் இயக்குநராக அவதாரம் எடுத்து தனி முத்திரை பதித்தவர் குட்டா பாப்பிநீடு சவுத்ரி. கேங் லீடர், கில்லாடி நம்பர் 786, மஹாதீருடு உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். 

தெலுங்கில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சிரஞ்சீவிக்கு கொடுத்தது இவர் தான். அதேபோன்று சிரஞ்சீவியின் அபிமான இயக்குநர் இவரே. இவர் கடந்த சில வருடங்களாக அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நாளை ஹைதராபாத்தில் உள்ள மஹாப்ரஸ்தானம் என்ற பகுதியில் நடைபெறுகிறது. 

இவரது திடீர் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. திரையுலகைச் சேர்ந்த பலர் இவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close