போடு தகிட தகிட...: உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 05:21 pm
suriya-to-release-ngk-trailer

என்ஜிகே படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா நாளை வெளியிட இருக்கிறார். 

தானா சேர்ந்த கூட்டம்" படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது 'NGK' படத்தில் நடித்துள்ளார். இதனை செல்வராகவன் இயக்குகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர்.

படத்திற்கு இசை செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. அதோடு தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களில் வெளியாகிவரும் நிலையில், இந்த படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோரிடம் ட்வீட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தனர். 

இதனையடுத்து இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை வெளியாகி உள்ள இந்த டிரைலரை நடிகர் சூர்யாவே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார். இதுகுறித்து டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

 

நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் டிரைலரை அவரே வெளியிடுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close