ஓவியா படத்திற்கு அதிகாலை காட்சி!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 03:12 pm
early-morning-show-for-oviya-s-90-ml

அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்எல் திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாக இருக்கிறது என்றும் அன்றைய தினம் அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஓவியா. அவர் நடித்திருக்கும் களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்.எல் ஆகிய படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குளிர் 100 டிகிரி படத்தை இயக்கிய அனிதா உதீப் 90 எம்எல் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சிம்பு இசையதத்துள்ளார். இதற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கும் நிலையில் இதன் டிரைலர் நேற்று முன் தினம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த டிரைலர் பெரும் சர்ச்சையை ஏறபடுத்தியது. 

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து ட்விட்டரில், "பிப்ரவரி 22-ம் தேதி 90 எம்.எல் படத்தின் முதல்நாள் முதல் காட்சியில் உங்களை சந்திக்கிறேன்" என்றும் கூறியுள்ளார். எனவே அந்த திரைப்படம் அன்று வெளியாகிறது என்பதும் அதிகாலையில் சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் உறுதியாகி உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close