14 வருடங்களுக்கு பிறகு உருவாகிறதா கண்ட நாள் முதல் 2?

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 09:20 am
kanda-naal-muthal-2-on-cards

பிரசன்னா மற்றும் லைலா இணைந்து நடித்த கண்ட நாள் முதல் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து பேச்சு வார்த்தை நடப்பதாக  நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

2005ம் ஆண்டு பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இயக்குநர் பிரியா இயக்கிய திரைப்படம் கண்ட நாள் முதல். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கடைத்தது. 

குறிப்பாக யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே இன்றளவும் பலரது விருப்பமான பாடல்களாக இருக்கின்றன. 

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் இயக்குநர் பிரியா, நடிகர் பிரசன்னா, லைலா, கார்த்திக் குமார் ஆகியோர் மீண்டும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் தங்களது ‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தில் பணியாற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டதாகவும், விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close