சூர்யா ரசிகர்களே... வெளியானது என்ஜிகே டீசர்

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 10:46 am

suriya-released-ngk-trailer

அரசியலை மையப்படுத்தி செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படத்தின் டீசரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

தானா சேர்ந்த கூட்டம்" படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது 'NGK' படத்தில் நடித்துள்ளார். இதனை செல்வராகவன் இயக்குகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர்.

படத்திற்கு இசை செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. அதோடு தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களில் வெளியாகிவரும் நிலையில், இந்த படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோரிடம் ட்வீட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தனர். 

இதனையடுத்து இந்த படத்தின் டீசர் காதலர் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாரப்பூரவமாக டீசர் வெளியாவதற்குள் சிலர் அதனை இணையத்தில் லீக் செய்துவிட்டனர். வெளிநாட்டில் திரையிடப்பட்ட போது அதனை யாரோ வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டதாக கூறப்பட்டது. 

 

 

இந்நிலையில் 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட டீசரை தற்போது சூர்யா குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வெளியிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close