டிஸ்னியின் ஃபிரோசன் 2 டிரைலர் வெளியானது

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 12:33 pm
most-awaited-frozen-trailer-released

இந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஸ்னியின் ஃபிரோசன்(Frozen) திரைப்படத்தின் 2ம் பாகத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 

2013ம் ஆண்டு வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டூடியோ ஃப்ரோசன் திரைப்படத்தை வெளியிட்டது. ஆனா மற்றும் அவளது சகோதரி எல்சாவுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை அனிமேஷனில் பார்த்த ரசிகர்கள் அந்த படத்திற்கு உலகளவில் பெரும் வரவேற்பு அளித்தனர். 

இந்த படத்தை ஜெனிபர் லீ மற்றும் கிரிஸ் பக் இயக்கி இருந்தனர். இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதையும் பெற்றது. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் உருவாகிறது என்ற அறிவிப்பு வெளியானது. எப்போது இதுகுறித்து அப்டேட் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியானது. 

இந்த டிலைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close