ஆக்‌ஷன் படத்தில் அக்கா-தங்கையாக சிம்ரன்- த்ரிஷா

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 01:55 pm
simran-and-trisha-join-hands-for-an-action-adventure-flick

ரஜினிகாந்த் உடன் பேட்ட படத்தில் நடித்த நடிகை சிம்ரனும், த்ரிஷாவும் அடுத்ததாக சுமந்த் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் இயக்கும் சாகசம் நிறைந்த ஆக்‌ஷன் திரைப்படத்தில் சகோதரிகளாக நடிக்க இருக்கின்றனர். 

இதனை ‘கொரில்லா’ திரைப்படத்தை தயாரித்த ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  

 

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படம் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் இப்படத்திற்காக சிம்ரனும், த்ரிஷாவும் கப்பற்படை சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், இதன் ஷூட்டிங் பணிகள் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக தயாராகி வருவதாக த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமாக தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close