தனுஷ் படத்திற்கு யூ / ஏ சான்றிதழ்

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 10:10 am
enai-nokki-payum-thotta-gets-u-a-certificate

கடந்த 2016ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் "எனை நோக்கி பாயும் தோட்டா" படத்தில் நடிக்க தொடங்கினர். இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டு,மீண்டும் 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது. 

இதனையடுத்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக அமைந்திருந்தது. 

இப்படத்தில் இருந்து முதலில் வெளியான மறுவார்த்தை பேசாதே பாடல் இன்றளவும பலரது ப்ளேலிஸ்ட்டில் இருக்கிறது. மேலும் தர்புகா சிவா இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. பிறகு படத்தின் டீசரும் வெளியானது. ஆனால் சில காரணங்களுக்காக ரிலீஸ் தேதி மட்டும் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. 

இந்நிலையில் இந்த படத்திற்கு யூ / ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. தணிக்கை செய்யப்பட்டுவிட்டது என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close