ஷூட்டிங் எப்போங்க துவங்கும்?: 'வர்மா' நடிகை ஆர்வம்!

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 07:00 pm
varma-actress-can-t-wait-to-begin-shoot

அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் 'வர்மா'வில் நடிக்க புதிதாக ஒப்பந்தமாகியுள்ள நடிகை பனிதா சந்து, படத்தில் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், ஷூட்டிங் எப்போது துவங்கும் என காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில், நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க பாலா இயக்கினார். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஈ4 என்டர்டெயின்மென்ட் முகேஷ் மேத்தாவுக்கும், இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், படத்தில் இருந்து பாலா நீக்கப்பட்டார். துருவ் விக்ரம் தவிர மற்ற அனைவரும் நீக்கப்பட்டு, புதிய இயக்குனரை வைத்து படத்தை மீண்டும் எடுக்க முடிவெடுக்கப்பட்டது. 

இந்நிலையில், படத்தின் புதிய நாயகியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இதற்கு முன், அக்டோபர் என்ற பாலிவுட் படத்தில் நடித்து புகழ்பெற்றார். இந்நிலையில், நீண்ட நாட்களாக நல்ல கதைக்காக காத்திருந்ததாகவும், தற்போது வர்மாவில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

"ஆம், நான் வர்மாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஷூட்டிங்குக்காக காத்திருக்கிறேன். அடுத்த மாதம் துவங்கினால் நன்றாக இருக்கும்" என்று பனிதா கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close