சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கும் ஜெய்!

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 08:32 pm
jai-to-play-lead-in-a-superhero-movie

'நீயா 2' படத்தில் நடித்து வரும் நடிகர் ஜெய், அடுத்ததாக 'பிரேக்கிங் நியூஸ்' என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும், வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தை, புதுமுக இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக 'ஜருகண்டி' படத்தில் நடித்திருந்த நடிகர் ஜெய், தற்போது 'நீயா 2', பார்ட்டி, மலையாளத்தில் மதுரராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக, சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க ஜெய் ஒப்பந்தமாகியுக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும், நார்வேயை சேர்ந்த திருக்கடல் உதயம், இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சூப்பர்மேன், பேட்மேன் போல நாட்டை காப்பாற்றும் ஒரு ஒரிஜினல் சூப்பர் ஹீரோ கதையாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆண்ட்ரூ பாண்டியன், ஏற்கனவே அந்நியன் உள்ளிட்ட படங்களில் வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்ப வல்லுனராக பணியற்றியுலதால், இந்த படத்தில் சுமார் 90 நிமிடங்கள் வி.எஃப்.எக்ஸ் நிறைந்த காட்சிகள் இருக்குமாம்.

'பிரேக்கிங் நியூஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், வரும் 21ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக துவங்குகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close