இம்சை அரசனாக வடிவேலுவுக்கு பதில் யோகிபாபு?

  Newstm Desk   | Last Modified : 19 Feb, 2019 04:08 pm
yogi-babu-replaces-vadivelu-in-imsai-arasan-2

கடந்த 2006ம் தேதி வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இந்த படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் வடிவேலு ஹீரோவாக அறிமுகமானார். 

இயக்குநர் சிம்பு தேவன் இயக்கிய இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு 2017ம் ஆண்டு வெளியானது. இந்த படத்திற்கு இம்சை அரசன் 24ம் புலிகேசி என தலைப்பிடப்பட்டு, இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. 

இந்த படத்தையும் ஷங்கர் தயாரிக்க சிம்புதேவன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சில பிரச்னைகளால் வடிவேலு இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. 2 ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. 

இந்நிலையில் இந்த படத்தில் வடிவேலுவுக்கு பதிலாக யோகிபாபுவை நடிக்க வைக்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ள யோகிபாபு பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close