திருமணம் நடந்தது உண்மை: நடிகர் அபி சரவணன்

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 03:51 pm
marriage-happened-was-true

தனக்கும் அதிதி மேனனுக்கும் திருமணம் நடந்தது உண்மை எனவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் நடிகர் அபி சரவணன் தெரிவித்துள்ளார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் 'பட்டதாரி'. இந்த படத்தின் கதாநாயகனான அபி சரவணனும், கதாநாயகி அதிதி மேனனும் (ஆதிரா சந்தோஷ்) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், நடிகை அதிதி மேனன் தன்னை ஏமாற்றியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அபி சரவணன் புகார் தெரிவித்திருந்தார்.

இதனிடையே நேற்று (பிப்.19) அபி சரவணன் தன்னை திருமணம் செய்து கொண்டதாக வதந்திகளை பரப்பி வருவதாகவும், போலி திருமண சான்றிதழ் உருவாக்கி தன்னை தொலைபேசியில் மிரட்டி வருவதாகவும், கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிதி மேனன் புகார் அளித்தார். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அபி சரவணன், " அதிதி மேனனுக்கும் எனக்கும் சட்டப்படி திருமணமானது உண்மை. இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால் நான் வெளியில் சொல்லவில்லை. ஆனால், 2016 லிருந்து ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு திருமணமானதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் சொன்ன மாதிரி நன்கொடைகளை எனது சுயலாபத்துக்கு பயன்படுத்தவில்லை. அதற்குரிய ஆதாரமும் என்னிடம் உள்ளது. 

எங்களுக்குள் பிரச்சனை வருவதற்கு காரணமே சினிமா துறையை சேர்ந்த சுஜித் என்பவர் தான். அதிதி மேனன் மனம் மாறி என்னுடன் வாழ வந்தால் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன்." என கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close