விஸ்வாசம் படத்தின் டங்கா... டங்கா... பாடல் வீடியோ வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 09:30 am
danga-danga-song-video-released

"விஸ்வாசம்" திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த படத்தின் டங்கா டங்கா பாடல் வீடியோ தற்போது யூடியூப்பில் வெளியாகி உள்ளது. 

இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் என்ற இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் திரைக்கு வந்தன. இரண்டுமே நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 4வது படமான விஸ்வாசம் இந்த கூட்டணியில் வந்த மற்ற 3 படங்கையும் விட நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. டி. இமான் இசையமைப்பில் அமைந்த பாடல்கள் அனைத்து ஹிட் . குறிப்பாக "அடிச்சி தூக்கு" பாடல் படம் வெளியாவதற்கு முன்பே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. 

இதனையடுத்து இந்த படத்தின் பாடல்களின் வீடியோ ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்த படத்தின் டங்கா டங்கா பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close