ரயில்வே துறையில் 1லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்கள்...! விண்ணப்பித்துவிட்டீர்களா இளைஞர்களே?

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 02:32 pm
more-than-1-lakh-vacancy-in-railway-department

ரயில்வே துறையில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் மாதம் சொற்ப ஊதியத்திற்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் தங்களுக்கு உள்ள எண்ணற்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை.

ரயில்வே துறை என்பது தொடர்ந்து வளர்ச்சி கண்டுவரும் துறை. இதில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும், இதற்காக இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) அறிவித்துள்ளது.

இதில், 1 லட்சம் பணியிடங்கள் தொழில்நுட்பம் சார்ந்தவை , 30 ஆயிரம் பணியிடங்கள் தொழில்நுட்பம் சாராதவை. இவற்றிக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்தால் வேலை கிடைப்பது எளிது எனக் கூறப்படுகிறது.  இந்தப் பணிகளுக்காக வரும் 28 -ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களை அறிய www.rrbchennai.gov.in  என்ற இணையதளத்தில் பெறலாம்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close