மார்ச் 29-இல் வெளியாகிறது சூப்பர் டீலக்ஸ்: இன்று முதல் டிரைலர்!

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 11:25 am
super-deluxe-trailer-from-today

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள "சூப்பர் டீலக்ஸ்" திரைப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாகிறது. 

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா  அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது. 

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது. 

 

 

அதோடு இன்று டிரைலர் வெளியாகும் என்றும், படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மார்ச் 29 -ஆம் தேதி வெளியாகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு டிரைலர் வெளியாகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close