தமிழுக்கு வரும் 'இன்கேம் இன்கேம்' நாயகி

  Newstm Desk   | Last Modified : 23 Feb, 2019 01:36 pm
rashmika-mandana-to-act-in-tamil-movie

இன்கேம் இன்கேம் பாடல் ஹிட்டடித்த பிறகு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

கடந்தாண்டு இந்தியாவில் பிரபலமான பாடல்களில் ஒன்றாக இருந்தது தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் இன்கேம் இன்கேம் பாடல். இந்த பாடல் ஹிட்டடித்த பிறகு இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவுக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உருவாகினர். 

இப்போதும் இவர் சமூக வலைதளங்களில் பகிரும் போட்டோக்களுக்கு அத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள். கன்னட சினிமா, தெலுங்கு சினிமா என கலக்கிவந்த அவர் எப்போது தமிழ் சினிமாவுக்கு வருவார் என தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். 

அது நிறைவேறும் விதத்தில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. நடிகர் கார்த்தி அடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் ராஷ்மிகாதான் ஹீரோயின் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close