ஒரு நாள்... ஒரு காட்டுக்குள்ள: ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி டப்பிங்

  Newstm Desk   | Last Modified : 24 Feb, 2019 02:56 pm
super-delux-vjs-dubbing-video

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் டிரைலருக்காக நடிகர் விஜய் சேதுபதி டப்பிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா  அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது. 

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இதன் டிரைலர் நேற்று முன் தினம் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் இந்த டிரைலர் ஹிட் அடித்தது. 

குறிப்பாக இந்த டிரைலரின் பின்னணியில் விஜய் சேதுபதி கூறும் கதையும் அவரது குரலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் அந்த கதைக்கான டப்பிங்கில் விஜய் சேதுபதி பேசும் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். டிரைலரை தொடர்ந்து இதுவும் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close