ஆஸ்கார் விழாவில் ஆஸ்கார் நாயகன்! வைரலாகும் புகைப்படம்!

  Newstm Desk   | Last Modified : 25 Feb, 2019 01:50 pm
oscars-2019-ar-rahman-is-posting-updates-from-the-academy-awards

உலகின் உயரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில், இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நமது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொண்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விழாவில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். 

கடந்த 2009 ம் ஆண்டு நடந்த விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஸ்லம் டாக் மில்லினர்' திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் அப்படத்தில் இடம்பெற்ற  ‘ஜெய் ஹோ' பாடலுக்கு என ஒரே மேடையில் இரண்டு விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

இந்நிலையில், தற்போது நடைபெறும் விழாவில் கலந்துகொண்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் விழாவில் எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close