ஷ்ரத்தா கபூர் பிறந்தநாளுக்கு படக்குழு கொடுத்த பரிசு..!

  Newstm Desk   | Last Modified : 03 Mar, 2019 03:52 pm
sahoo-movie-video-release

ஷ்ரத்தா கபூர் பிறந்த நாள் பரிசாக 'சாஹோ' படத்திற்கான ஸ்னீக் பீக் 2 வீடியோவை  'சாஹோ'பட‌க்குழு வெளியிட்டுள்ளது.

 சுஜீத்ரெட்டி இயக்கத்தில்  பிரபாஸ் நடித்து வரும் படம் 'சாஹோ. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்-இஷான்-லாய்  இசையமைக்கின்றனர். 300 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை மும்பை, ஹைதராபாத், துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தி உள்ளனர். 

இந்நிலையில் அப்படத்தின் நாயகி ஷ்ரத்தா கபூரின் பிறந்த நாளை முன்னிட்டு "சாஹோ' படத்தின்"ஸ்னீக் பீக் 2"வீடியோவை படக்குழு வெளியிட்டனர். இந்த வீடியோவில்"சஹோ"படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அது உருவான விதத்தை காட்டியுள்ளனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் ஆகஸ்ட் 15ல்  திரைக்கு வர உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close