புதுப்பேட்டை 2: தனுஷ் வெளியிட்ட அப்டேட்

  Newstm Desk   | Last Modified : 05 Mar, 2019 01:48 pm
pudhupettai-2-on-cards

புதுப்பேட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை பணிகள் நடைபெற்று வருவதாக தனுஷ் தெரிவித்துள்ளார். 

தனுஷ், சினோகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இந்த படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமாக கருதப்படுகிறது. 

இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது புதுப்பேட்டை இரண்டாம் பாகம் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர். 

அப்போது பேசிய அவர், "அந்த படத்திற்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் போது அது முதல் பாகத்திற்கு நியாயமாக இருக்க வேண்டும். அதே போல கொக்கி குமார் கதாபாத்திரத்துக்கும் நான் நியாயம் செய்ய வேண்டும். இது எளிமையான விஷயம் அல்ல. இந்த படத்திற்கான திரைக்கதை பணிகள் நடைபெற்ற வருகின்றன" என தெரிவித்துள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close