"பணத்து மேல ஆசை" அயோக்கியனாக மாறும் விஷால்!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 12:55 pm
ayogya-teaser-release

விஷால் நடிப்பில் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ள "அயோக்யா" திரைப்படத்தின் டீஸர் மிரட்டும் இசையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஷாலின் "பணத்து மேல ஆசை" என்னும் வசனம் இந்த படத்தில் அவரது பாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜீனியர் என்டிஆர் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் "டெம்பர்". இந்த படத்தின் ரீமேக் இந்தியில் சிம்பா என்னும் பெயரில் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழில் விஷால் நடிப்பில் "அயோக்யா" என்னும்  பெயரில்  டெம்பர் பட ரீமேக் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராசி கண்ணா கதாநாயகியாகவும், பார்த்திபன் வில்லனாகவும் நடித்து வருகின்றனர். ஆக்சன் படமான  இந்த படத்தை வெங்கட் மோஹன் இயக்குகிறார். 

இந்நிலையில் அயோக்யா படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஷால் "எனக்கு பணம் தான் முக்கியம்" என்னும் வசனத்துடன்  வலம் வரும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வசனம், விஷால் படத்தில் நல்லவரா?கெட்டவரா? என்னும் கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் ஏப்ரல் 19ல் திரைக்கு வருகிறது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close