"காதலிக்க யாருமில்லை" என பெயர் மாற்றப்பட்ட முரட்டு சிங்கிள்.

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 01:36 pm
kathalikka-yarumillai-movie-title

ஜீ வி.பிரகாஷ் மற்றும்  ரைசா வில்சன்  நடித்து வரும் படத்திற்கு, "காதலிக்க யாரும் இல்லை" என  பெயர் சூட்டப்பட்டுள்ளது.  

ஜீ.வி.பிரகாஷ் மற்றும்  ரைசா வில்சன்  நடித்து வரும் திரைப்படத்திற்கு "காதலிக்க யாருமில்லை" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ்  இயக்குகிறார்.

"முரட்டு சிங்கிள்" படத்திற்கான  டைட்டில்  வெளியீட்டு விழா தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது, இந்த படத்தின் கதை மிடில் கிளாஸை சேர்ந்த சிங்கிள் இளைஞனை மையப்படத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதால்  "காதலிக்க யாருமில்லை" என பெயர் மாற்றம் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டைட்டில் 1964 ல் ஸ்ரீதர்  இயக்கத்தில் வெளிவந்த படமான‌ "காதலிக்க நேரம் இல்லை".படத்தில்  உள்ள பாடல் வரிகளாகும். இந்த படத்தில் முத்துராமன், பாலய்யா, ரவிச்ச‌ந்திரன்,  நாகேஷ், காஞ்சனா, சச்சு உள்ளிட்ட  நடிகர்கள் நடித்திருந்தனர்.  இந்த படமே தமிழில் வெளிவந்த முதல் "ஈஸ்மண்ட்  கலர்"படமாகும். மேலும்  காதலிக்க நேரம் இல்லை திரைப்படம் 175 நாட்களை  கடந்தும் திரையரங்குகளில் ஓடிய படமாகும்.

இந்நிலையில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல் வரிகளை  முரட்டு சிங்கிள் திரைப்படத்திற்கு  சூட்டுவதன் மூலம் "காதலிக்க நேரமில்லை" திரைப்படம் போலவே "காதலிக்க யாருமில்லை" திரைப்படமும் நீண்ட நாள் திரையிடப்பட்டு சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close