குற்றாலத்தில் ஆரம்பித்த தனுஷ் படம்

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 04:21 pm
dhanush-next-film-name-productionno-34

தனுஷ் நடிக்க இருக்கும்  புரோடக்ச‌ன்  நம்பர் 34 படத்திற்கான பூஜை குற்றாலத்தில் நடந்தது.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவ‌ங்கியது. ஏற்கனவே இயக்குனர் துரை செந்தில்குமார் தனுஷின் கொடி படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக இவர்களின் கூட்டணி புரோட‌க்சன் நம்பர் 34ன் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் சினேகா முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் 2006ல் வெளிவந்த செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை  படத்தில் ஒன்றாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தனுஷின்  புதிய படத்திற்கான சூட்டிங்கை படக்குழு ஆரம்பித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close