இமான் இசையில் ஆல‌ங்குருவிகளா பாடல்!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 07:54 pm
aalangkuruvikalaa-song-video-release

இமான் இசையில் பக்ரீத் படத்தின் ஆலங்குருவிகளா பாடல் உருவான விதம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

 தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்தவர் விக்ராந்த். இவர் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பக்ரீத்.  இந்த திரைப்படத்தை ஜகதீச‌ன் சுபு இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு  இமான் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தில் வசுந்தரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் ஒட்டகம் குறித்த முதல் படமாகும். விக்ராந்த் ஒட்டகம் வளர்க்கும் நபராக இந்த படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட பக்ரீத் படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் இந்த திரைப்படத்தின் "ஆலங்குருவிகளா" பாடல் உருவான விதம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் சித்ஸ்ரீராம் குரலில் இமானின் இசையில் இனிமையான பாடலாக அமைந்துள்ளது.  இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close